மார்க்க அறிஞர்களே!
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதிகாரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலையீட்டிற்கு அறவே அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 39:3, 5:3, 3:19, 3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 4:33, 18:102-106) இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள் இதை உண்மைப்படுத்தும். ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை மனித [...]
Read More...ஐயமும்! தெளிவும்!! – நபிமொழி
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته காலித் பின் வலீத் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாட்டுப்புற மனிதர் அண்ணல் நபி (ஸல்)அவர்களிடம் வந்து, “”அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகிலும் மறு உலகிலும் எனக்குத் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்களைப் பற்றி உங்களிடம் கேட்டுச் செல்வதற்காக வந்திருக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “”உனக்கு என்னென்ன தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் கேள்” என்று கூறினார்கள். வந்த மனிதர் சுமார் 23 கேள்விகளை எழுப்பி விளக்கம் [...]
Read More...மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா?
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته “மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. எனவே, அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள்”. (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கே சுஜூத் செய்யவேண்டும். அவனிடமே சரணடைய வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக் கூடாது. “துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி) அந்த வணக்கத்தை [...]
Read More...அல்லாஹ் பொருந்திய வியாபாரம்
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்ற வல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (சூரா ஸப் 61:10) மேற்காணும் வசனத்தில் அல்லாஹ் மனிதர்களை மறுமையின் தண்டனையிலிருந்து காப்பாற்றக் கூடிய வியாபாரத்தை அறிவிப்பதாக கூறி அதற்கு பதிலாக அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதர் மீதும் ஈமான் கொண்டு நமது உயிர்கள் மற்றும் பொருள்களைக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போராடுவதே என்று கூறுகிறான். நாம் பார்த்த இவ்வசனத்தில் உள்ள, பொருளை செலவு செய்வது குறித்த இன்றைய சமூக சூழலை கொஞ்சம் உற்றுப் பார்த்தால் சமூகத்தின் நிலை நன்கு விளங்கும். மார்க்கத்தை அதிகம் பேசுபவர்கள் கூட பொருளாதார ரீதியான தியாகம்என்றால் தங்கள் பர்ஸை இறுக பிடித்துக் கொள்வதை பார்க்கின்றோம். காற்று வீசுவதை விட வேகமாக தர்மம் செய்யக் கூடிய காலத்திலிருந்து, கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டிய ஜகாத்தே விவாதப் பொருளாக மாறி விட்ட சூழலில் வாழும் நமக்கு மிக தேவையான படிப்பினை சுஹைப் (ரலி) அவர்களின் வாழ்வில் உள்ளது. சுஹைப் (ரலி) ஈராக்கில் செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதிலும், ஈராக் ரோமர்களால் வெற்றி கொள்ளப்பட்ட போது அடிமையாக கொண்டு வரப்பட்டு மக்கத்து வீதிகளில் விற்கப்பட்டார். மக்கத்து மக்களிடத்தில் அதிகமாக இருந்த தங்கத்தை உருக்கும் சிறந்த பொற்கொல்லராக திகழ்ந்த சுஹைப் (ரலி) சத்திய இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்றுக் கொண்டார். ஹிஜ்ரத் இஸ்லாத்தை ஏற்று கொண்ட சுஹைப் (ரலி) மக்காவிலிருந்து மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் அபுபக்கருடன் (ரலி) ஹிஜ்ரத் செல்லும் போதே செல்ல நினைத்தாலும் சில காலம் கழித்தே ஹிஜ்ரத் செல்ல நேரிட்டது. சுஹைப் (ரலி) ஹிஜ்ரத் செல்வதை அறிந்த குறைஷிகள் அவரை பின் தொடர்கின்றனர். குறைஷிகள் தம்மை பின் தொடர்வதை அறிந்த சுஹைப் (ரலி) ஓரிடத்தில் தம் குதிரையை நிறுத்தி அவர்களை நோக்கி கூறினார்கள், “நான் அம்பெய்வதில் வல்லவன் என்பது உங்களுக்குத் தெரியும். என்னிடத்தில் உள்ள அம்புக்கூட்டில் உள்ள அனைத்து அம்புகளையும் ஏவி உங்களை கொல்வேன். அதுவும் தீர்ந்து போனால் என்னிடம் உள்ள கத்தியைக் கொண்டு அனைவரையும் கொல்வேன்” என்று கூறுகிறார். உம்முடைய வியாபாரம் வெற்றி அளித்து விட்டது இவ்வாறு குறைஷிகளை பயமுறுத்திய [...]
Read More...ஏப்ரல் 2013 மாதாந்திர அமர்வு
بسم الله الرحمن الرحيم 33:66 يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا 33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். 33:67 وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا 33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் [...]
Read More...முனாபிக்குகள் – முதல் சமூகமும் நாமும்
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته தற்காலத்தில் முஸ்லீமாக இருப்பவர்களில் அதிலும் குறிப்பாக குர்ஆன் ஹதீதுகளைப் பற்றிய சிறிய ஞானம் இருப்பவர்களிடத்தில் பிறரை இழிவாக கருதும் போக்கு மிகைத்திருப்பதை நம்மால் பரவலாகக் காண முடிகிறது. ஒரு முறை ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் அழகான ஆடைகளை, காலணிகளை அணிவது பெருமையாகுமா என்று கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ அல்லாஹ் அழகானவன். அவன் அழகானதையே விரும்புகிறான்” என்று கூறி விட்டு “ பெருமை என்றால் சத்தியத்தை மறைப்பதும் பிறரை இழிவாகக் கருதுவதும்” ஆகும் என்றார்கள். பிறரை இழிவாகக் கருத கூடிய குணமான பெருமை இன்று நம்மில் பலரிடம் கோலோச்சுவதைப் பார்க்கிறோம். இந்தப் பெருமைதான் ஷைத்தானை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்கியது. செல்வத்தின் காரணத்தால், கல்வியின் காரணத்தால் வந்த பெருமை இன்று அமல்களின் காரணத்தால்… ஏன்? தான் சார்ந்துள்ள அமைப்பின் காரணத்தாலும் வருவதைப் பார்க்கின்றோம். அதனால்தான் தன்னை போலவே ஏக அல்லாஹ்வை இறைவனாகவும், முஹம்மது (ஸல்)அவர்களை தலைவராகவும் குர்ஆனை தன் சட்டமாகவும் ஏற்றுக்கொண்ட முஸ்லீம் சகோதரன், தான் சாராத அமைப்பில் இருக்கிறான் என்பதற்காக பகிரங்கமாக தடம் புரண்டோர் பட்டியலில் இணைப்பதை இன்று கண்கூடாக பார்க்கின்றோம். பிறரை முனாபிக் ஆக்க அயராது பாடுபடும் நம்மில் எத்துணை நபர்கள் நம்மிடம் முனாபிக்கின் பண்புகள் இருக்கின்றனவா என்று சிந்தித்துப் பார்த்திருக்கின்றோம். கீழ்காணும் நான்கு பண்புகள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர்கள் முனாபிக் என்று அல்லாஹ்வின் இறுதி தூதர் (ஸல்) பட்டியலிட்டார்கள். 1. அமானித மோசடி 2. பொய் பேசுதல் 3. வாக்குறுதி மீறல் 4. சண்டையிட்டால் மோசமான முறையில் நடந்து கொள்ளல் (ஸஹீஹ் புகாரி) கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நம்மில் பலரிடம் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பண்பு இருப்பதை நாம் தெளிவாக உணரலாம். ஆனாலும் பிடிவாதமாய் நம் வாழ்வில் யாரேனும் ஒரு நபரை முனாபிக் ஆக்க முயற்சிக்கும் நாம் கீழ்காணும் இரு சம்பவங்களையும் பார்ப்போமா? நபியவர்கள் ஹுதைஃபா இப்னுல் யமானிடம் (ரலி) மதீனாவிலிருந்த முனாஃபிக்குகளை அடையாளம் காண்பித்திருந்தார்கள். இறுதி வரை இதை ஹுதைஃபா பாதுகாத்து வந்தது இஸ்லாமிய வரலாற்றின் ‘மதீனத்து ரகசியம்’. என்ற சிறப்பான பட்டத்தை அவருக்கு ஈட்டித் தந்தது. ஹுதைஃபா (ரலி) பாதுகாத்து வந்த இந்த ரகசியத்தை யார் கேட்டாலும் அவர் சொல்வதே இல்லை. ஆனால் உமர் (ரலி) இதை வேறு விதத்தில் கிரகிக்க முனைந்தார். அவர் கலீஃபாவாக இருக்கும்பொழுது யாரேனும் முஸ்லிம் இறந்து அவருக்கு ஜனாஸாத்தொழுகை நடைபெறும் பொழுது ஹுதைஃபா (ரலி) வந்திருக்கிறாரா [...]
Read More...எங்கே செல்கிறது இளைய சமுதாயம்?
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்? எப்படி உள்ளது இளைஞர் சமூகம்? இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள். புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக் கூடியவர்கள். கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள். மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை. [...]
Read More...இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங்களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராகவும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு. இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்புகளை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள். பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, சிறந்த எழுத்து ஏற்படுத்தும் தாக்கம் [...]
Read More...குழந்தைகளைப் பாதுகாப்போம்! அடுத்துக் கெடுப்பவர்களிடமிருந்து…
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته நமது குழந்தைகள் சிறுவயதிலேயே பாலியல் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் குழந்தை கற்பழிக்கப் படுகின்றது. பத்து குழந்தைகளில் ஒன்று பாலியல் வன்முறைக்கு பலியாகின்றது. இத்தனையும் இந்தியாவிலேயே நடைபெறுகின்றது. பாலியல் வன்முறை என்பது குழந்தைகளின் மறைவிடங்களை சில காம வெறியர்கள் தங்கள் வெறிக்குப் பயன்படுத்துவது. இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுள் பாதிபேர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். உலகிலுள்ள இதர நாடுகளைவிட இந்தியா இந்த விஷயத்தில் முன்னே நிற்கின்றது. இந்த [...]
Read More...சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்
بسم الله الرحمن الرحيم “வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது. அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சாலை விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் [...]
Read More...
